மூத்த எழுத்தாளர் மே.சு. சண்முகம் காலமானார்! இலக்கிய ஆளுமைகள் திரண்டு இறுதி அஞ்சலி
13 Jan 2026, 3:17 pm
<p><strong>மூத்த எழுத்தாளர் மே.சு. சண்முகம் காலமானார்! இலக்கிய ஆளுமைகள் திரண்டு இறுதி அஞ்சலி</strong></p>
<p>கோவில்பட்டி, ஜன. 13 - மூத்த எழுத்தாளர் நென்மேனி மேட்டுப்பட்டி மே.சு. சண்முகம், வயது மூப்பின் காரணமாகத் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 96. இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத் தின் மூத்த தலைவரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன், எழுத் தாளர் கோணங்கி, நாடகக் கலைஞர் முருக பூபதி மற்றும் பாலசுப்பிரமணியன், பாண்டியன் ஆகியோரின் தந்தையாவார். நில அளவைத் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றிய மே.சு. சண்முகம், அந்தத் துறை யில் பணியாற்றுபவர்களின் நாடோடித் தன்மை யையும், சவால்களையும் விவரிக்கும் ‘நிலம் மருகும் நாடோடி’ என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் ஆவார். இலக்கிய உலகில் தனக்கெ னத் தனி முத்திரை பதித்தவர். இவரது ‘என் கதை’ என்ற சுயசரிதை நூல் மற்றும் நில அள வைக் குழுவின் அனுபவங்களைப் பேசும் ‘கதாச்சுருள் - இரண்டு’ ஆகியவை மிக முக்கிய மான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. மேலும், ‘இப்படியும் சில மனிதர்கள்’, ‘பெரிய வயல்’ போன்ற நூல்களின் மூலம் கிரா மப்புற மனிதர்களின் வாழ்வியலையும், மனிதப் பண்புகளையும் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், மே.சு. சண்முகம் மறைவுச் செய்தி அறிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும் கோவில்பட்டி இந்திரா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மத்தியக் குழு உறுப்பினர் கள் பி. சம்பத், கே. பாலபாரதி ஆகியோ ரும், மாநில செயற்குழு உறுப்பினர் கள் மதுக்கூர் ராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன், கே. சாமுவேல்ராஜ், கே. அர்ஜு னன், செ. முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், பொதுமேலாளர் ஜோ. ராஜ்மோ கன் ஆகியோர் கலந்துகொண்டு குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் அ. குருசாமி, திருநெல்வேலி மாவட்டச் செய லாளர் க. ஸ்ரீராம், தூத்துக்குடி மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே. சீனிவாசன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா மற்றும் ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் கு. ஜக்கையன், பிரபல திரைக்கலைஞரும் எழுத்தாளருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான படைப் பாளிகள், கலைஞர்கள் மற்றும் தமுஎகச நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றுத் தமிழ் இலக்கிய உலகின் மூத்த ஆளுமைக்குத் தங்களின் செவ்வணக்கத்தைச் செலுத்தினர். தலைவர்கள் இரங்கல் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள், ச. தமிழ்ச் செல்வனைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.</p>
