முந்தய பக்கம்

மூத்த பத்திரிகையாளர் ராமசாமி காலமானார்

8 Mar 2026, 3:42 pm
மூத்த பத்திரிகையாளர் ராமசாமி காலமானார்
<p><strong>மூத்த பத்திரிகையாளர் ராமசாமி காலமானார்</strong></p> <p>சென்னை,மார்ச் 8- இந்தியாவின் மிகப்பெரிய செய்தி முகமையான பிடிஐ &nbsp;நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளரும், தமிழக த்தின் மூத்த பத்திரிகை யாளருமான எஸ். ராமசாமி (74), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 8) காலமானார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். 30 ஆண்டு கால &nbsp;பயணம் பத்திரிகை மற்றும் பிடிஐ வட்டாரங் களில் &lsquo;எஸ்.ஆர்&rsquo; என்று அன்புடன் அழைக் கப்படும் ராமசாமி, கடந்த 1978-ஆம் ஆண்டு பிடிஐ செய்தி முகமையில் சேர்ந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை யில் செய்தியாளராகப் பணியாற்றிய அவர், தனது கடின உழைப்பால் மண்டல மேலாள ராகப் பதவி உயர்வு பெற்று, சில ஆண்டு களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். முதலமைச்சர்களுடன் &nbsp;நெருங்கிய நட்பு தமிழக அரசியல் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களில் களப்பணியாற்றிய ராம சாமி, முன்னாள் முதலமைச் சர்களான எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகியோரு டன் மிகுந்த மரியாதைக்குரிய மற்றும் இணக்கமான நட்பைப் &nbsp;பேணியவர். மிகவும் இக்கட்டான மற்றும் அழுத்தமான சூழல்களிலும் அமைதியாகவும் நிதான மாகவும் செய்திகளைச் சேகரிக்கும் இவரது தனித்துவமான பணிமுறை, சக மற்றும் இளம் பத்திரிகையாளர்களிடையே பெரும் மதிப்பைப் பெற்றது. அவரது உடல் திருவான்மியூர் குப்பம் பீச் ரோடில் எண்.ஜி 1, சுதா பிளாட்ஸ் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. &nbsp;ராமசாமி உடலுக்கு மூத்த பத்திரிகை யாளர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். திங்களன்று (மார்ச்9) &nbsp;நண்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram