தீக்கதிர் முக்கிய செய்திகள்
9 Feb 2026, 3:02 pm

முதுபெரும் தோழர் டி. அய்யாறு மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!

சென்னை: முதுபெரும் தோழர் டி. அய்யாறு மறை வுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒரு வருமான தோழர் டி. அய்யாறு (வயது 82) உடல்நலக் குறை வால், திங்கட்கிழமையன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறது. ‘டி.ஏ.’ என அன்போடு அழைக்கப்பட்ட தோழர் டி. அய்யாறு குடவாசல் பகுதியில் சமூக ஒடுக்குமுறை களுக்கு எதிராகவும், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் நலன்களுக்காகவும் அயராது போராடிய வர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், குடவாசல் தாலுகா செயலாளர், குடவாசல் பேரூராட்சி மன்றத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு அர்ப்பணிப்போடு செயல்பட்டவர். அவரது மகன் தோழர் டி.ஏ. சரவணன், கட்சியின் குடவாசல் நகரக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தோழர் டி. அய்யாறுவின் மறைவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், குடவாசல் பகுதி மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறை வால் வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கட்சி யின் மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுத லையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் 18 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்.10 (செவ்வாய்) முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போ ராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலு வலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சீ.காந்திமதி நாதன் மற்றும் பொதுச் செயலாளர் க.பிரபு ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முக்கியக் கோரிக்கைகள் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதோடு, அவர் களைத் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதி யத் திட்டத்தில் இணைக்க வேண்டும். மேலும், ‘கலை ஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான அலகுத் தொகையை பொதுமக்களின் நலன் கருதி 6 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசை வலியுறுத்தி முதற்கட்டமாக பிப்.10 அன்று காலை 10 மணிக்கு வட்டாரத் தலைநகரங்களிலும், பிப்.11 அன்று மாவட்டத் தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊராட்சி செயலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியியல் பிரிவு அலுவலர்கள் வரை அனைவரும் பங்கேற்பதால், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டப் பணிகள் மற்றும் இதர ஊரக வளர்ச்சித் திட்டங்கள் மாநி லம் முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து; நீதி விசாரணை வேண்டும்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப் பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி. தமது சமூக வலைதளப் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். “டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி கட்டுப்பாட்டு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. இது போதுமான நடவடிக்கை அல்ல; ஏற்கெனவே குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியி டங்கள், முழுமையான காலிப்பணியிடங்கள் நிரப்புதல் என போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில் இப்படியான டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடிகள் என்பது தொடர்ந்து வருகிறது. இது எந்த விதமான வெளிப்படைத் தன்மையையோ , நம்பிக்கை யையோ இளைஞர்கள் மத்தியில் உருவாக்காது. டிஎன்பி எஸ்சி தேர்வு குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும். தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளி யோடு உடனடியான நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் தேர்தல்?

சென்னை: தமிழகத் தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற் கான வாய்ப்பு உள்ளதாக பாஜக தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ் சூசகமாகக் கூறியுள்ளார். சென்னையில் நடை பெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்த லுக்கு இன்னும் 65 நாள் கள்தான் இருப்பதாகவும், முதல் கட்டமாகவே தமி ழகத்தில் தேர்தல் நடை பெற வாய்ப்பு உள்ளதாக வும் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அண் ணாமலை பங்கேற்க வில்லை.'

‘அன்புமணியே தலைவர்’

சென்னை: பாமக நிறு வனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட அதிகார மோத லால் கட்சி இரண்டாகப் பிரிந்த நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட ஆவ ணங்களின் அடிப்படை யில் அன்புமணியே பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றத்தில் உறுதி செய்து உள்ளது. அன்புமணி தரப்பு பாஜக-அதிமுக கூட்டணி யில் சேர்ந்துள்ளதால் ராமதாஸ் தரப்பில் தில்லி உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மனு தள் ளுபடி செய்யப்பட்டுள்ளது.