தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழம்பெரும் திரைக்கலைஞர் ‘சவுகார்’ ஜானகி மறைந்தார்!

21 Aug 2026, 9:25 pm
பழம்பெரும் திரைக்கலைஞர் ‘சவுகார்’ ஜானகி மறைந்தார்!

பழம்பெரும் திரைக்கலைஞர் ‘சவுகார்’ ஜானகி மறைந்தார்!

சென்னை, ஆக. 21 -தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் திரைக்கலைஞர் ‘சவுகார்’ ஜானகி காலமானார். அவருக்கு வயது 94.

உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சவுகார் ஜானகி, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (ஆக. 21) அன்று பிற்பகல் காலமானார்.

1950-இல் ‘சவுகாரு’ தெலுங்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் புதிய பறவை, எதிர் நீச்சல், பாமா விஜயம், பார் மகளே பார், நீர்க்குமிழி, இரு கோடுகள், படிக்காத மேதை, பாக்யலட்சுமி போன்ற படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

70 ஆண்டுகளுக்கும் மேலான கலைப்பயணத்தில், ‘காவியத்தலைவி’, ‘ரங்கராட்டினம்’ போன்ற படங்களைச் சொந்தமாக தயாரித்தும் நடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதல் ரஜினி, கமல் வரை பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய 4 முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்த பெருமைக்குரியவர். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் ‘பிஸ்கோத்’.

சவுகார் ஜானகியின் கலைச் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2022-இல் பத்மஸ்ரீ விருது வழங்கியது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி, ஆந்திர மாநில அரசின் ‘நந்தி’ விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.