தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நவ. 29-இல் 11 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

25 Nov 2025, 3:29 pm
நவ. 29-இல் 11 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

நவ. 29-இல் 11 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

சென்னை, நவ. 25 - நவம்பர் 29 அன்று சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை யொட்டிய தெற்கு அந்தமான் கடலில் உரு வான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற் றுள்ளது. இது புயலாக மாறாது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், நவம்பர் 29 அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங் களுக்கும் புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவ கங்கை, இராமநாதபுரம் மாவட்டங் களுக்கு கனமழைக்கான மஞ்சள்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 முதல் 30 வரை தமிழ கத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளிலும் மிதமான  மழைக்குவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்!

குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவ.28 முதல் 30 வரை கனமழை முதல் மிக கனமழை  பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி யுள்ளது.  வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரான முனைவர் எம். சாய்குமார் கடலூர், மயிலாடுதுறை, நாகப் பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார். அப்போது, நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்கவும், நேரடி கொள் முதல் மையங்களிலிருந்து நெல் மூட்டைகளை பாதுகாப்பாக நகர்த்த வும், கூடுதல் மின்கம்பங்கள் மற்றும் மின்வடங்களை தயார் நிலையில்  வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின்  மூன்று அணியினர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியிலும், இரண்டு அணியினர் கடலூர் நகராட்சிக்கு அருகிலும் நிலை நிறுத்தப்பட் டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு அணி நவம்பர் 26 முதல் விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.