வீனஸ் பள்ளியில் திறன் தேர்வு
28 Aug 2026, 12:27 am

வீனஸ் பள்ளியில் திறன் தேர்வு

சிதம்பரம், ஆக 27-சிதம்பரம் வீனஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், வின்விங்ஸ் அகாடமி சார்பில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் திறன் தேர்வு நடைபெற்றது. இதில் 127 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் எஸ். குமார், நிர்வாக இயக்குநர் வி. அருண் ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்ற 46 மாணவர்களுக்கு முதல் பரிசும், 81 மாணவர்களுக்கு இரண்டாம் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

வின்விங்ஸ் அகாடமி நிறுவனர் கவிதா சந்திரசேகர், மார்க்கெட்டிங் சிவபாலா, பள்ளி முதல்வர் ஹெச். கிருஷ்ணராஜ், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் பொனிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.