திண்டுக்கல்லில் தமுஎகச முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினரும் கவிஞருமான வெண்முகிலன்
21 Jul 2026, 9:41 pm
<p>திண்டுக்கல்லில் தமுஎகச முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினரும் கவிஞருமான வெண்முகிலன் எழுதிய வயலை வீழ்த்திய வரப்புகள் என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. மாநகரச் செயலாளர் அ.வைத்திலிங்க பூபதி வரவேற்றார். மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் நூலை வெளியிட, முதல் பிரதியை லக்சர்வேர்ல்டு பள்ளியின் தாளாளர் கோ.சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். இலக்கியக்களத்தின் செயலாளர் எஸ்.ராமமூர்த்தி, கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளர் சு.பிரபாகரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் தாமோதரன், மாநிலக்குழு உறுப்பினர் வரத.ராஜமாணிக்கம், வெற்றிமொழி பதிப்பக ஆசிரியர் தமிழ்தாசன், பள்ளி கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்டத்தலைவர் ச.மோசஸ், கவிஞர் சுசீலாமேரி, எழுத்தாளர் தர்மராஜ், பேரா. வெ.முத்துலட்சுமி ஆகியோர் பேசினர். நூலாசிரியர் வெண்முகிலன் ஏற்புரையாற்றினார்.</p>
