வெண்மணி தியாதிகள் நினைவகம் திறப்பு
15 Dec 2025, 2:48 pm
<p><strong>வெண்மணி தியாதிகள் நினைவகம் திறப்பு</strong></p>
<p>கோவை, டிச.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவாரம்பாளையத்தில் வெண்மணி தியாதிகள் நினைவக அலுவலகம் மற் றும் பெயர் பலகை திறப்பு விழா நடை பெற்றது. கோவை, ஆவாரம்பாளையம் பகு தியில், சுமார் 60 ஆண்டுகளாக மார்க் சிஸ்ட் கட்சியின் கிளை செயல்பட்டு வரு கிறது. இந்த அலுவலகம் தற்போது புதுப்பிக்கப்பட்டு ஞாயிறன்று திறக்கப் பட்டது. சோபா நகர் சாலை, பகத் சிங் திடலில் நடைபெற்ற நிகழ்விற்கு 1 ஆவது கிளை மா.மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பி னர் ஜோ.கண்ணகி ஜோதிபாசு, கிளைச் செயலாளர் வே.மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ததீஒமு மாவட் டக்குழு உறுப்பினர் ப.சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. மனோகரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறந்து வைத்து மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் சிறப்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பீள மேடு நகரக் குழு செயலாளர் அ.மேக நாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.அஜய்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.பாண்டியன், சி. ஜோதிமணி மற்றும் நகரக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நிறை வாக ஓ.வேலுச்சாமி நன்றி கூறினார்</p>
