பெருந்துறையில் வெங்கடாசலம் வாக்குசேகரிப்பு
9 Apr 2026, 5:30 am
<p><strong>பெருந்துறையில் வெங்கடாசலம் வாக்குசேகரிப்பு</strong></p><p>ஈரோடு, ஏப்.9- பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் பணிக்கம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>பணிக்கம்பாளையம், கள்ளியம்பாளையம், கரண்டிபாளையம், காஞ்சிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிரமாக வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
