பொது இடத்திற்கு பட்டா வழங்க வெங்கமூர் கிராமத்தினர் எதிர்ப்பு
6 Oct 2026, 1:26 am

பொது இடத்திற்கு பட்டா வழங்க வெங்கமூர் கிராமத்தினர் எதிர்ப்பு

விழுப்புரம், அக்.5-விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி,வெங்கமூர் கிராமத்துகுட்பட்ட பொது இடமான சர்வே எண். 171/1 தீ ஏ தரிசுஇடத்தில் பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை (அக்.5) தடை மனுகொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெங்கமூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் கிராமத்திற்கு ஊராட்சி கட்டிடம் கட்டு வதற்கு போதிய இடம் வசதி இல்லாததால் ஊராட்சி கட்டிடம் இல்லை. அதனால் சர்வே எண் 171/1 தீ ஏ தரிசு அய்யனார் கோவிலுக்கு தென்புறமாக இருக்கும் இடத்தை கிராம ஊராட்சி கட்டிடம் கட்டு வதற்கு 2026 ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாத காந்தி ஜெயந்தி அன்றும் கிராம சபா கூட்டத்தில் கிராம பொது மக்கள் முன்னிலையில் கிராம ஊராட்சி கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக காணை ஊராட்சிஒன்றிய ஆணையர்க்கு தீர்மானம் ஒப்படைக்கப் பட்டது.

ஆனால் பொது பயன்பாட்டிற்கு உள்ள இந்த இடத்தை திருக்குணம் மதுரா தி.கொசப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் பயனாளிக்கு வெங்கமூரில் உள்ள சர்வே எண் 171/1 இந்த இடத்தில் மண்டல துணை வட்டாட்சியர் பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.இது தொடர்பாக வட்டாட்சியருக்கு கடந்த செப்டம்பர்18ம் தேதி தடை மனு வழங்க கொடுத்து உள்ளோம். ஆகையால் அந்த இடத்தில் எங்க ளுக்கு கிராம ஊராட்சி கட்டிடம் கட்டுவதற்கும், கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கும், விளை யாட்டு மைதானம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளதாக கிராம பொதுமக்கள் தெரி வித்தனர்.