வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது
10 Jan 2026, 2:48 pm
<p>வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, கடத்திச் சென்ற அமெரிக்க அரசை கண்டித்து சேலம், பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் எம்.ராமசாமி தலைமை வகித்தார். மாதர் சங்க வட்டத் தலைவர் க.பெருமா, வாலிபர் சங்க நிர்வாகி வினோத், விதொச மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆ.கந்தன், வட்டச் செயலாளர் க.காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
