தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெனிசுலா இடதுசாரி அரசுக்கு எதிரான மீண்டும் ஒரு சதி!

yesterday
வெனிசுலா இடதுசாரி அரசுக்கு எதிரான மீண்டும் ஒரு சதி!

வெனிசுலா இடதுசாரி அரசுக்கு எதிரான மீண்டும் ஒரு சதி!

லத்தீன் அமெரிக்க நாடுகளின் இறையாண்மையையும் இயற்கை வளங்களையும் சீர்குலைக்கத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், வெனிசுலாவில் மீண்டும் ஒரு அரசியல் குழப்பத்தையும் கலகத்தையும் தூண்டிவிடத் தீவிரமாக முயன்றுவருகிறது. கடந்த ஜனவரி3-ஆம் தேதி வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைச் சட்டவிரோதமாகக் கடத்திய பிறகு, அந்நாட்டின்இடைக்கால இடதுசாரி ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான ஆட்சியைமுடக்கி, தனது கையாட்களை அரியணையில் அமர்த்த அமெரிக்கா சதித்திட்டம் தீட்டுகிறது. இதன் ஒரு பகுதியாக,11 மாதங்களாகத் தப்பிஓடி தலைமறைவாக இருந்த தீவிர வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்கப்பாதுகாப்புப் படைகளின் உதவியோடும், கொலம்பியாவின் வலதுசாரி அரசின் ஆதரவோடும் மீண்டும் வெனிசுலாவுக்குள் ரகசியமாக அழைத்து வரப்பட்டுள்ளார்.

லாபம் கொழிக்கும் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்கும், லட்சக்கணக்கான டாலர்களைத் தனது கட்டுப்பாட்டில்வைப்பதற்கும் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகளுக்கு இந்த வலதுசாரி சக்திகள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். “எங்களுக்கு முழு வெனிசுலாவும் கட்டுப்பாட்டில் வேண்டும்” என்று பகிரங்கமாக கூச்சலிடும் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்க்கோ ரூபியோவும், வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரமாகும். அமைதியையும் உள்நாட்டு ஸ்திரத்தன்மையையும் சீர்குலைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி சிந்தனை கொண்ட தலைவர்களை ஒடுக்குவதே வாஷிங்டனின் முதன்மை நோக்கமாகஉள்ளது.

வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளங்களை அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க மறுக்கும் எந்தவொரு இடதுசாரி அரசையும் வீழ்த்துவது ஏகாதிபத்தியத்தின் வழக்கமான உத்தியாகும். கடந்த காலங்களில் பலமுறைதோல்வியடைந்த சதித்திட்டங்களின் தொடர்ச்சியாக, தற்போது மச்சாடோ போன்ற வலதுசாரி கைக்கூலிகளைமுன்னிறுத்தி, மீண்டும் வன்முறையையும் குழப்பத்தையும் தூண்டிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முயலும் அமெரிக்காவின் பாசிசத் தலையீடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் உள்கட்சிஅரசியல் கணக்குகளுக்காகவும், பன்னாட்டு எண்ணெய் பெருமுதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காகவும் ஒருஇறையாண்மை கொண்ட நாட்டின் அரசியலமைப்பைச் சீர்குலைக்கத் துடிப்பது சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயலாகும். வெனிசுலா மக்களின் சுயநிர்ணயஉரிமையையும், ஜனநாயகத் தேர்வுகளையும் மிதிக்கும் அமெரிக்காவின் இந்த ‘ஆட்சி மாற்றச் சூழ்ச்சி’ ஒருபோதும் வெல்ல முடியாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.