தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெனிசுலா நிலநடுக்கம்: 6,461 பேர் உயிருடன் மீட்பு 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதம்

1 Jul 2026, 10:47 pm
வெனிசுலா நிலநடுக்கம்:  6,461 பேர் உயிருடன் மீட்பு 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதம்

வெனிசுலா நிலநடுக்கம்: 6,461 பேர் உயிருடன் மீட்பு 58,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதம்

கராகஸ்,ஜூன்.30- வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஆறு நாட்களுக்குப் பிறகு, 6,461 பேரை உயிருடன் மீட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; அதேவேளையில், அதிகா ரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 1,943 ஆகவும், காயம டைந்தவர்களின் எண்ணிக்கை 10,571 ஆகவும் உயர்ந்துள் ளது. தற்போதும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போ யுள்ளதால் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாசா செயற்கைக்கோள் தந்த அதிர்ச்சித் தகவல்

நாசா (NASA) மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை யின் (ESA) ‘சென்டினல்-1’ (Sentinel-1) உயர்-திறன் ரேடார் செயற்கைக்கோள் அனுப்பிய தரவுகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்

நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளான ஜூன் 25 அன்று சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் ரேடார் தரவுகளின்படி, நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தோராயமாக 58,870 கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் அல்லது அழிந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

இது நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஒரு ஆரம்பகட்ட, விரைவான மதிப்பீடு மட்டுமே என்றும், இது களத்தில் நேரடியாக இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திருத்தம்

30.06.2026 அன்று வெளியான தீக்கதிர் 4ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள உ.வாசுகி கட்டுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் : சந்தேகங்களும் விவிபேட் எதார்த்தமும் என்ற துணைத் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சி படிவத்தில் என்பதை 17சி படிவம் என திருத்தி வாசிக்க வேண்டுகிறோம். மேலும், ஒரு வாக்குச் சாவடியில் ஒரு ஈவிஎம் இயந்திரத்தின் விவிபேட் சீட்டுகள் ஒப்பீடு செய்யப்பட்டு வந்தன; அதனை உச்சநீதிமன்றம் 5ஆக உயர்த்தி உள்ளது என குறிப்பிடப்பட்டிருப்பது, ஒரு வாக்குச்சாவடியில் அல்ல, ஒரு தொகுதியில் 5 என்பதே சரியாகும். -ஆசிரியர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.