1900-க்குப் பின் மிக மோசமான பேரழிவு வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,430 ஆக உயர்வு ; 50,000 பேர் மாயம்!
28 Jun 2026, 9:26 pm

1900-க்குப் பின் மிக மோசமான பேரழிவு வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,430 ஆக உயர்வு ; 50,000 பேர் மாயம்!

காரகஸ், ஜூன் 28 - வெனிசுலா நாட்டின் வடக்குப் பகுதியில் கடந்த புதனன்று (ஜூன் 24) அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த நாடும் உருக்குலை ந்துள்ளது. முதலில் 7.2 ரிக்டர் அள விலும், அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவிலும் பதிவான இந்த அதிபயங்கர நிலநடுக்க பேரழிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணி க்கை தற்போது 1,430 ஆக உய ர்ந்துள்ளது. மேலும், 50,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்ற அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

1900-ஆம் ஆண்டிற்குப் பிறகு வெனிசுலாவைத் தாக்கிய இந்த மிக மோசமான இயற்கைச் சீற்றத்தி னால் தலைநகர் காரகஸ், முக்கியத் துறைமுக நகரான லா குவைரா உள்ளிட்ட பகுதிகள் முற்றிலுமாகச் சிதைந்துள்ளன.

இடிபாடுகளுக்குள் தொடரும் மீட்புப் பணி

இதுகுறித்து வெனிசுலா நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அதிகா ரப்பூர்வ தகவலின்படி, இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதோடு, 3,238 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3,142 குடும்பங்கள் தங்களது வீடு களை இழந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு 72 மணி நேரங்களைக் கடந்திருந்தாலும், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்களை உயிருடன் மீட்கும் அசாத்தியப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கூறு கையில், “பாதிக்கப்பட்ட மக்களு க்குத் தேவையான அவசர உதவி களைச் செய்ய வெனிசுலா அரசுடன் இணைந்து உலக நாடுகள் பலவும் கரம் கோர்த்துள்ளன. இதுவரை அமெரிக்கா, மெக்சிகோ, ஸ்பெ யின், கொலம்பியா, எக்குவடோர் உட்பட 24 நாடுகள் தங்களின் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளன. மொத்தம் 2,741 சர்வதேச மீட்புப் பணியாளர்களும், 96 மோப்ப நாய் களும் இரவும் பகலும் களப்பணி யாற்றி வருகின்றனர்” என்றார்.

இயல்பு நிலைக்குத் திரும்பும் முக்கியப் பகுதிகள்

மீட்புப் பணிகளை வேகப்படுத் தும் நோக்கில், தலைநகர் காரகஸ் அருகே உள்ள ‘சைமன் பொலி வார்’ சர்வதேச விமான நிலையத் தின் ஓடுதளம் போர்க்கால அடிப்ப டையில் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் எவ்விதத் தடையு மின்றி வேகமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றடைகின்றன.

மேலும், நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கட லோர மாநிலமான ‘லா குவைரா’-வில் சுமார் 60 சதவீத மின்சார விநி யோகம் ஊழியர்களின் தீவிர முயற்சியால் மீண்டும் சரிசெய்யப் பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு சவாலான சூழல் நிலவினாலும், “ஒரு உயி ரைக் கூட கூடுதலாக இழக்கக் கூடாது” என்ற நோக்கில் சர்வ தேசக் குழுக்கள் இயங்கி வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.