தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

2 hours before
தீக்கதிர்  உலக செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம் : உயிரிழப்பு 500 ஐ கடந்தது

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. தற்போது கட்டட இடிபாடுக ளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை தேடும் பணி தீவி ரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 583 என அறிவிக்கப்பட்டுள்ளது. 4,000 க்கும் மேல் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களை காணவில்லை எனப் புகார்கள் பதிவாகியுள்ளன. அமெரிக்கா விதித்துள்ள 1000 க்கும் அதிகமான பொருளாதார தடைகளின் காரணமாக போதிய மருந்து பொருட்கள் இல்லாமல் அந்நாடு கொடிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

எபோலா உயிரிழப்பு 300-ஐ தாண்டியது

காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் ஊடக அமைச்ச கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 1,155 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 304 பேர் உயிரிழந்துள்ள னர். மொத்தம் 138 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மேலும் 326 பேர் தீவிரக் கண்காணிப்பு அல்லது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். பரவலை தவிர்க்க பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு பயண விதிகளை காங்கோ அரசு மிகவும் கடினமாக்கியுள்ளது.

உக்ரைனுக்கான நேட்டோ உதவி : ஸ்லோவேகியா கடும் எதிர்ப்பு

உக்ரைனுக்கு நேட்டோ வழங்க உள்ள நிதி உதவியை ஸ்லோவேகியா அரசு எதிர்த்துள்ளது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக நேட்டோ அமைப்பு புதிய நிதி உதவித் திட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளது. அதில் தனது நாடு எந்தக் காரணத்தைக் கொண்டும் பங்கேற்காது என்பதை உறுதி செய்யத் தேவையான “அனைத்து” முயற்சிகளையும் எடுக்கப் போவதாக ஸ்லோவேகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) உறுதியளித்துள்ளார். உக்ரைன் ஆதரவாளர் ஒருவரால் நடத்தப்பட்ட கொலை முயற்சியில் இருந்து உயிர் பிழைத்த பின்னணியில் இதனை அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் மீதான போருக்கு நேட்டோ நாடுகள் உதவி செய்தது அம்பலம்

டெஹ்ரான்,ஜூன் 26- ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய சட்டவிரோதப் போருக்கு நேட்டோ நாடுகள் உதவி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது . இப்போருக்கு நேட்டோ நாடுகள் செய்த உதவியானது, சர்வதேச விதிகளை மீறிய செயல். இதற்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் நேட்டோ நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் நேட்டோ அமைப்பின் பொ துச்செயலாளர் மார்க் ரூட்டே வெளியிட்ட பரபரப் பான ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்தே ஈரான் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

நேட்டோ பொதுச்செயலாளர் வெளியிட்ட ரகசியம்

அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்குப் பேட்டியளித்த நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, ஈரான் மீதான தாக்குதலின் போது பல்வேறு ஐரோப்பிய நாடு களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போர் விமானங்கள் ஈரானை நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக ஒப்புக்கொண்டார். ஈரான் மீதான போரின் போது ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு குறைவாக இருந்தது என டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலை யில் தான் அப்படி கூறப்படும் புகார்களில் உண்மை யில்லை. நேட்டோ கூட்டணி நாடுகள் தங்களது ராணுவத் தளங்களை அமெரிக்காவிற்கு வாரி வழங்கியுள்ளன. இந்தத் தாக்குதலின் போது ஐரோப்பிய ராணுவத் தளங்களில் இருந்து மட்டும் சுமார் 4,000 முதல் 5,000 வரையிலான போர் விமானங்கள் ஈரான் மீது தாக்குதலின் போது அனுப் பப்பட்டு அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கப்பட்டது என்று மார்க் ரூட்டே குறிப்பிட்டார். குறிப்பாக இத்தாலியில் உள்ள அமெரிக்க தளங்களில் இருந்து மட்டும் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈரான் மீதான தாக்குதலுக்காக அனுப்பப்பட்டது என கூறினார். இந்தத் தகவல் இத்தாலியில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் வலதுசாரி அரசாங்கம், தாங்கள் இந்தப்போரில் பங்கேற்கவில்லை என்றும், அதற்கு எதிராக இருப்பதாகவும் ஏற்கெ னவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேட்டோ பொதுச்செயலாளர் கூற்று சர்ச்சையை கிளப்பி யுள்ளது. பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதல்களுக்கு எதிராக இத்தாலியத் தொழிலாளர்களும் பொது மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்த உண்மை வெளிவந்துள்ளது அந்நாட்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. இதன் பிறகும் ஐரோப்பிய நாடுகளின் பங்க ளிப்பு தனக்கு போதிய திருப்தியை அளிக்கவில்லை என்று டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. தண்டனை கொடுக்கப்பட வேண்டும் நேட்டோ பொதுச்செயலாளரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை தொடர்ந்து, ஈரானின் வெளியுற வுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஇ கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு இறையாண்மை கொண்ட ஐ.நா அவை யின் உறுப்பு நாட்டுக்கு (ஈரான்) எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோதப் போரில் நேட்டோ அமைப்பு நேரடியாக இணைந்துள்ளது. அதற்கு இந்த வாக்குமூலமே தெளிவான மற்றும் உறுதியான சான்றாகும். இது சர்வதேசச் சட்டங்கள் மற்றும் ஐ.நா சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை மிக மோசமாக மீறும் செயலாகும். மேலும், ஈரான் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலுக்கு இத்தாலி, ருமேனியா உள்ளிட்ட உதவிய நாடுகள் அனைத்தும் தங்களது நாட்டு மக்களுக்கும், உலகிற்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒட்டுமொத்தப் பேரழிவிற்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமான நேட்டோ அமைப்பும், அதன் உறுப்பு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈரான் தற்போது வலியுறுத்தி வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.