முந்தய பக்கம்

நந்தனார் மடத்தில் தொல். திருமாவளவன் மரியாதை

27 Jan 2026, 3:28 pm
நந்தனார் மடத்தில் தொல். திருமாவளவன் மரியாதை
<p><strong>நந்தனார் மடத்தில் தொல். திருமாவளவன் மரியாதை</strong></p> <p>சிதம்பரம், ஜன. 27- &nbsp;சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் கட்சியினருடன் செவ்வாய் க்கிழமை நந்தனார் மடத்திற்கு வருகை தந்தார். இவரை நந்தனார் கல்விக் கழக தலைவர் கே.ஐ. மணி ரத்னம் உள்ளிட்ட கல்விக் கழக உறுப்பினர்கள் வர வேற்றனர். பின்னர் சக ஜானந்தா சமாதி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அப்போது விசிகவினர் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் தமிழ்வளவன், தமிழ்ஒளி உள்ளிட்ட கட்சியினர் உடன் &nbsp;இருந்தனர். தொடர்ந்து நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாயிலில் அமைக்கப் பட்டுள்ள அவரது மணி மண்டபத்திற்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துடன் இணைந்து திருமாவளவன் மரியாதை செலுத்தினார். &nbsp;இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சாமி சகஜானந்தா மணி மண்டபம் ஒருங்கிணைப்பு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் கட்சியினருடன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram