தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வேண்டும் வேலூர் சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

27 Sept 2026, 3:06 am
பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வேண்டும் வேலூர் சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வேண்டும் வேலூர் சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்

வேலூர், செப்.26 –தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு மாநில மாநாடு வேலூரில் நடைபெற்றது. இம்மாநாட்டை கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத் தலைவர் டி.தமிழரசு தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது வங்கிகளில் அதிகரித்து வரும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

வேலூர் மாவட்ட உதவித் தலைவர் மஞ்சுளா வரவேற்க, கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு மாநில கன்வீனர் கே.ஜெயலட்சுமி அறிக்கையை சமர்ப்பித்தார். வேலூர் மாவட்ட கௌரவத் தலைவர் ஏ.நாராயணன், எல்.ஐ.சி. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் ஆர்.அமுதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க அகில இந்திய இணை செயலாளர் எம்.கிரிஜா சிறப்புரையாற்ற, கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் இ.சர்வேசன் நிறைவுரையாற்றினார். வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் மு.சசிகுமார் நன்றி கூறினார். மாநாட்டு ஏற்பாடுகளை வேலூர் மாவட்டத் தலைவர் துரைராஜ் மற்றும் பொருளாளர் தனசேகரன் செய்திருந்தனர். முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில், மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து “தமிழ்நாடு வங்கி” உருவாக்குவது, நகர மற்றும் பணியாளர் கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் இணைப்பது, பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு வழங்குவது, அனைத்து கிளைகளிலும் தனி கழிப்பறை வசதி மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி ஒவ்வொரு வங்கியிலும் உள்ளகக் குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கூட்டுறவு வங்கி ஊழியர் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில கன்வீனராக கே.ஜெயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.