வனவிலங்கு வார விழாவில் ஓவியப்போட்டி
7 Oct 2026, 2:04 am

வனவிலங்கு வார விழாவில் ஓவியப்போட்டி

வேலூர், அக். 6- வேலூரில் நடைபெற்ற வனவிலங்கு வார விழா ஓவியப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

வேலூர் வனக்கோட்டம் சார்பில் அக். 2 முதல் 8-ஆம் தேதி வரை வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் பகுதியாக வேலூர் டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் “வாழிடங்களை இணைத்து வனவிலங்குகள் செழித்து வளர்தல்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் காடுகள் பாதுகாப்பு, நீர்நிலைகளின் முக்கியத்துவம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் வரைந்த ஓவியங்களை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், வன அதிகாரி பரணிதரன் உள்ளிட்டோர் பார்வையிட்டுப் பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கினர்.