தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியுடன் வேலூர் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

21 Mar 2026, 2:42 pm
வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியுடன்  வேலூர் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
<p><strong>வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியுடன் &nbsp;வேலூர் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்</strong></p> <p>வேலூர், மார்ச் 21 - வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் விஐடி பல்கலைக்கழகம் சுகாதாரத் துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் &nbsp;மேற்கொண்டுள்ளன. வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் வேலூர் &nbsp;கிருத்துவ மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சாலமன் சதீஷ்குமார் மற்றும் விஐடி பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் &nbsp;கையெழுத்திட்டனர். தொடர்ந்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து, சுகாதாரத் துறையில் &nbsp;ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க இணைந்து செயல்பட முடியும். மேலும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி மற்றும் அறிவியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஊக்குவிப்பதும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். நிகழ்வில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, &ldquo;வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. உலக அளவில் முதல் முறையாக இந்தியாவில் செய்யப்பட்ட சில விஷயங்கள் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளன. &nbsp;1948-இல் &nbsp;உலகின் முதல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவில் முதல் செவிலியர் கல்லூரி 1946-இல் தொடங்கப்பட்டது. 1961-இல் இந்தியாவின் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1971-இல் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1986-இல் இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி நாட்டிலேயே எப்போதும் தனித்துவமாக விளங்கி வருகிறது&rdquo; என்றார். இதில் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாலமன் சதீஷ்குமார் பேசும்போது, &ldquo;இந்தியாவில் உயர்கல்வியில் முன்னணியில் உள்ள விஐடி பல்கலைக்கழகம் பயோ இன்ஜினியரிங், பயோ இன்ஃபர்மேடிக்ஸ், பயோமெட்டீரியல்ஸ் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த ஒத்துழைப்பு மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார தீர்வுகளை வழங்க முடியும்&rdquo; என்றார். நிகழ்வில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் பிஜூ ஜார்ஜ், &nbsp;விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், சுகாதார அறிவியல் மற்றும் பொறியியல் துறை முதன்மையர் கீதா மணிவாசகம் மற்றும் கிருத்துவ மருத்துவக் கல்லூரி (ராணிப்பேட்டை வளாகம்) இணை இயக்குநர் தீபக் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.