முந்தய பக்கம்

​​​​​​​போக்குவரத்து விதிமீறல்: ரூ.1 கோடி அபராதம்

28 Jun 2026, 12:56 am
​​​​​​​போக்குவரத்து விதிமீறல்: ரூ.1 கோடி அபராதம்
<p><strong>​​​​​​​போக்குவரத்து விதிமீறல்: ரூ.1 கோடி அபராதம் </strong></p><p>வேலூர், ஜூன் 27- வேலூர் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் நோக்கில், காவல்துறையினர் முக்கியச் சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 14,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் இயக்குபவர்கள் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் மட்டுமே செலுத்த முடியும் என்றும், தொடர்ந்து இச்செயலில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram