முந்தய பக்கம்

முன்கூட்டியே வாடகை கேட்பதைக் கண்டித்து முதலமைச்சருக்கு வணிகர்கள் இ-போஸ்ட் போராட்டம்!

8 Jun 2026, 11:14 pm
முன்கூட்டியே வாடகை கேட்பதைக் கண்டித்து முதலமைச்சருக்கு வணிகர்கள் இ-போஸ்ட் போராட்டம்!
<p><strong>முன்கூட்டியே வாடகை கேட்பதைக் கண்டித்து முதலமைச்சருக்கு வணிகர்கள் இ-போஸ்ட் போராட்டம்!</strong></p><p>வேலூர், ஜூன் 8- வேலூர் மாநகராட்சி கடைகளுக்கு முன்கூட்டியே வாடகை செலுத்தக் கோருவதைக் கண்டித்தும், நிர்வாகத் தாமதத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தைத் ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மண்டலத் தலைவர் ரா.ப.ஞானவேலு தலைமையில் வணிகர்கள் தலைமை அஞ்சலகத்தில் முதலமைச்சருக்கு இ-போஸ்ட் (e-Post) அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மனுவில், 2026 ஏப்ரல் மற்றும் மே மாத வாடகையைக் கணினியில் பதிவேற்றுவதில் அரசு ஊழியர்கள் செய்த தாமதத்தால், வணிகர்கள் 5% கூடுதல் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ள தாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மாதத் தொடக்கத்திலேயே முன்கூட்டியே வாடகை கேட்டு வற்புறுத்தக் கூடாது என்றும், மாதம் முழுவதும் அபராதமின்றி வாடகை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், தற்போதைய அபராதத் தொகையை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram