செகண்ட் ஹேண்ட் கைபேசிகள் வாங்குவதைத் தவிர்க்கவும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
22 May 2026, 1:26 am
<p><strong>செகண்ட் ஹேண்ட் கைபேசிகள் வாங்குவதைத் தவிர்க்கவும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!</strong></p><p>வேலூர், மே 21- வேலூர் மாவட்டத்தில் திருடப்படும் கைபேசிகள் பெரும்பாலும் பொதுச் சந்தை களில் விற்கப்படுவதால், பொதுமக்கள் செகண்ட் ஹேண்ட் கைபேசிகளை வாங்கு வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.சிவராமன் அறிவுறுத்தியுள்ளார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழனன்று (மே 21) ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் காணா மல் போன மற்றும் களவு போன புகார்க ளின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீ சாரால் மீட்கப்பட்ட, சுமார் 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 284 கைபேசிகளை உரிய உரிமையாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் சிவராமன் ஒப்ப டைத்தார். தங்களது கைபேசிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். சிஇஐஆர் இணையதளத்தைப் பயன்படுத்துங்கள் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் கூறியதாவது: "பொதுமக்களின் கைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் க்ரைம் பிரிவிலோ புகார் அளிக்க வேண்டும். புகார் அளித்தவுடன் அதற்கான சி.எஸ்.ஆர் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஒன்றிய அரசின் என்ற இணையதளத்தில் கைபேசியின் ஐஎம்இஐ எண் மற்றும் பயனர் விவரங்களைப் பதிவிட வேண்டும். இதன் மூலம், அந்த கைபேசியில் வேறு யாராவது புதிய சிம் கார்டை மாற்றினாலும் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துவிடும். அதைக்கொண்டு கைபேசியை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்." போலி செயலிகள் குறித்து எச்சரிக்கை தொடர்ந்து பேசிய அவர், "தற்போது 5,000 முதல் 10,000 ரூபாய்க்குள்ளேயே நல்ல புதிய ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. எனவே, பொதுமக்கள் தேவையின்றி செகண்ட் ஹேண்ட் கைபேசிகளை வாங்கி ஏமாற வேண்டாம். மேலும், வாட்ஸ்அப் குழுக்களில் வங்கிகளின் பெயரைக் குறிப்பிட்டுப் பகிரப்படும் போலி செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால், சைபர் குற்றவாளிகள் உங்களது வங்கியின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் போன்ற ரகசிய விவரங்களைத் திருடி, பண மோசடி செய்ய வாய்ப்புள்ளது" என்று எச்சரித்தார். டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மேலும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் புதிய வகை மோசடி குறித்து விளக்கிய அவர், "மத்தியப் புலனாய்வு அமைப்பு அல்லது காவல்துறை பேசுவதாகக் கூறி, 'உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம்' என மிரட்டி, கிரிப்டோகரன்சி அல்லது வங்கி கணக்குகள் மூலம் பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடிகளில் பொது மக்கள் யாரும் ஏமாற வேண்டாம்" என்றும் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.</p>
