துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 11:49 pm
<p><strong>துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தரப் பணிகளில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும், 5 ஆண்டுகளாகப் பணியில் உள்ளோரை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு மாவட்டத் தலைவர் எம்.காசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் நிறைவுரையாற்றினார். மாநகர தொழிற்சங்க அமைப்பாளர் சி.ஞானசேகரன் மற்றும் தீண்டாமை முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.</p>
