தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலூர் மாநகராட்சிக் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவேண்டும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பேரவையில் தீர்மானம்

21 Jun 2026, 2:09 am
வேலூர் மாநகராட்சிக் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவேண்டும்  ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பேரவையில் தீர்மானம்
<p><strong>வேலூர் மாநகராட்சிக் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவேண்டும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பேரவையில் தீர்மானம்</strong></p><p>வேலூர், ஜூன் 20- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட பேரவை மற்றும் பேரணி கே.வி.குப்பத்தில் மாவட்டத் தலைவர் பா.வேலு தலை மையில் நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் கு.சரவணன் மாநாட்டைத் துவக்கி வைக்க, மாவட்டச் செயலாளர் பா.செல்வகுமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் செ.அசோக்குமார் நிதிநிலை அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழுதடைந்த அலுவலகக் கட்டிடங்களை அகற்றி புதிய குடியிருப்பு கட்டித் தர வேண்டும், பிற துறை பணிகளை ஊரக வளர்ச்சித் துறையில் திணிப்பதைக் கைவிட வேண்டும், அரசு விடுமுறை நாட்களில் உயரதிகாரிகள் கள ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும் மற்றும் வேலூர் மாநகராட்சிக் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்து சுத்திகரித்து ஏரிகளில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக கா.வெங்கடேஷ் குமார், செயலாளராக எம்.சுந்தர், பொரு ளாளராக ஏ.உமாமகேஸ்வரி உட்பட 17 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர் த.கொளஞ்சிவேலு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக நடைபெற்ற பேரணியை கல்வித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் அ.சேகர் துவக்கி வைக்க, ஏ.உமாமகேஸ்வரி வரவேற்றார். வெ.மணிகண்டன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க, நிர்வாகிகள் வே.மீனா, சுரேஷ்கண்ணன், ஆனந்தன், சதீஷ்குமார் தீர்மானங்களை முன்மொழிந்தனர். ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பா.ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், மாநில துணைத்தலைவர் சு.சுமதி, சிஐடியு மாவட்ட இணை செயலாளர் சி.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.