வேலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்: 2 மாதங்களாக விநியோகம் இல்லை எனப் புகார்
3 Jun 2026, 12:32 am
<p><strong>வேலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்: 2 மாதங்களாக விநியோகம் இல்லை எனப் புகார்</strong></p><p>வேலூர், ஜூன் 2- வேலூர் மாநகராட்சி கொசப்பேட்டை எஸ்எஸ்கே மானியம் பகுதி மக்கள், கடந்த 2 மாதங்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப் படாததைக் கண்டித்துச் செவ்வாயன்று காலை சார்பனாமேடு பில்டர்பெட் டேங்க் நீரேற்று நிலையம் அருகில் திடீர் சாலை மறி யலில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சியின் 60 வார்டு களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், பாலாறு நீரேற்று நிலையங்கள், பொன்னை கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஓட்டேரி நீரா தாரம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில், 3-ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட கொசப்பேட்டை எஸ்எஸ்கே மானியம் குடியிருப்பு பகுதிக்கு நீண்ட நாட்களாகக் குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங் களுடன் மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வேலூர் தெற்கு காவல்துறையினர், மாநக ராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால், போலீஸார் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி தற்காலி கமாகக் கலைந்து போகச் செய்தனர்.</p>
