வேலூரில் 300 செல்போன்கள் மீட்பு
7 Oct 2026, 2:00 am

வேலூரில் 300 செல்போன்கள் மீட்பு

வேலூர், அக். 6-வேலூர் மாவட்டத்தில் சிஇஐஆர் தளம் மூலமாக மீட்கப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன் உத்தரவின்பேரில், காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சிஇஐஆர் இணையதளம் வழியாக 12-வது கட்டமாக ரூ.60 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.5.05 கோடி மதிப்பிலான 2,588 செல்போன்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கைபேசிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. ந.உ.சிவராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் ஆய்வாளர் ரஜினிகுமார், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.