சேறும் சகதியுமாக வேலூர் நேதாஜி மார்க்கெட் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
28 May 2026, 12:00 am
<p><strong>சேறும் சகதியுமாக வேலூர் நேதாஜி மார்க்கெட் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி</strong></p><p>வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நேதாஜி மார்க்கெட், உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மிக மோசமான நிலையில் உள்ளது. இங்கு 750-க்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை மற்றும் பூக்கடைகள் செயல்பட்டு வரும் நிலை யில், சிறிதளவு மழை பெய்தாலே ஒட்டு மொத்த மார்க்கெட் பகுதியும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மார்க்கெட்டிற்குள் செல்லவே அச்சப் பட்டுத் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.</p>
