தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் ஆயிரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!

4 Nov 2026, 11:40 pm
வேலூர் நறுவீ மருத்துவமனையில்  ஆயிரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!

வேலூர் நறுவீ மருத்துவமனையில் ஆயிரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!

வேலூர், நவ.4-வேலூர் நறுவீ மருத்துவமனையில் 1,000-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்றுஅறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத்தெரிவித்தார்.

2021 முதல் மருத்துவர் வெர்னன் லீ தலைமையில் இயங்கும் இப்பிரிவில், அமெரிக்கதயாரிப்பான ‘கோரி’ ரோபோ மூலமும் நியாயமான கட்டணத்தில் அறுவை சிகிச்சைகள்செய்யப்படுகின்றன. வழக்கமாக 3 மாதங்கள்ஆகும் குணமடையும் காலம், இங்கு 1 முதல்2 மாதங்களாகக் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்), ஓமன், மஸ்கட் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருகை தருகின்றனர். தொடர்ந்து சர்வதேசதரத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைமையமும், செயற்கை கருத்தரிப்பு மையமும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மருத்துவமனை துணைத்தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் மருத்துவர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் அரவிந்தன் நாயர், மருத்துவகண்காணிப்பாளர் மருத்துவர் ஜேக்கப் ஜோஸ், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் வெர்னன் லீ,தலைமை இயக்குதல் அலுவலர் மருத்துவர் விக்ரம், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர். சாதன படைத்தமருத்துவர் வெர்னன் லீக்கு தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.