சுமைப்பணி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
27 May 2026, 12:29 am
<p><strong>சுமைப்பணி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>வேலூர், மே 26- வேலூர் மாவட்ட சுமைப்பணி தொழி லாளர் சங்கம் செவ்வாயன்று (மே 26) நேஷனல் சர்க்கிள் அருகில் உள்ள சேமிப்பு கிடங்கு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. லாரியில் இருந்து சரக்கு இறக்கும் தொழிலாளர்களுக்கு இறக்கு கூலியை ஒப்பந்ததாரர் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சங்க மாவட்ட பொருளாளர் பார்த்திபன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் சலீம், செந்தில் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் துணைத்தலைவர்கள் எம்.காசி வி.நாகேந்திரன், ஏ.பழனியப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
