வேலூர் காப்பீட்டு கழக ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகிகள் படத்திறப்பு, புகழஞ்சலி
5 Jun 2026, 11:31 pm
<p><strong>வேலூர் காப்பீட்டு கழக ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகிகள் படத்திறப்பு, புகழஞ்சலி</strong></p><p>வேலூர், ஜூன் 5- வேலூர் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் டி.மணவாளன் மற்றும் எஸ்.ராமன் ஆகியோரின் படத்திறப்பு விழா நடைபெற்றது. காப்பீட்டு கழக ஊழியர் சங்க வேலூர் கோட்டத் தலைவர் பி.எஸ்.பாலாஜி தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுச்செயலாளர் எஸ்.பழனிராஜ் வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க இணை பொதுச்செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு பொதுச்செயலாளர் வி.சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, மறைந்த தலைவர்களின் படங்களைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, எல்ஐசி முதல்நிலை கோட்ட அதிகாரிகள் சங்க செயலாளர் வி.கே.ரவிச்சந்திரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, எல்ஐசி ஓய்வூதியர் சங்க செயலாளர் டி.செந்தில்வேல், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், மாநகர தொழிற்சங்க கூட்ட மைப்பு கன்வீனர் சி.ஞானசேகரன் மற்றும் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு இணைச்செயலாளர் ஜானகிராமன் ஆகி யோர் நினைவு கூர்ந்து பேசினர். நிறைவாக, கோட்ட பொருளாளர் சி.கணேசன் நன்றி கூறினார்.</p>
