தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்களுக்குக் கணிதம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பயிற்சி அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட மாநாடு தீர்மானம்

4 Jan 2026, 5:55 pm
மாணவர்களுக்குக் கணிதம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பயிற்சி  அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட மாநாடு தீர்மானம்
<p><strong>மாணவர்களுக்குக் கணிதம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பயிற்சி &nbsp;அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட மாநாடு தீர்மானம்</strong></p> <p>காட்பாடி, ஜன. 4- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு காட்பாடி யில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் அமுதா தலை மையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலை வர் கே.விஸ்வநாதன் முன்னிலை வகிக்க, முத்து சிலுப்பன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் செய ல்பாட்டு அறிக்கையையும், பொருளாளர் குமரன் நிதி நிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். வேலூர் மாநகராட்சி துணை மேயர் பா.சுனில் குமார், கே.வி. குப்பம் வட்டார வளர்ச்சி &nbsp;அலுவலர் பா.வேலு ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். &lsquo;செயற்கை நுண்ணறி வும் எதிர்கால அறிவியல் தொழில்நுட்பமும்&rsquo; என்ற தலைப்பில் மேனாள் பொது ச்செயலாளர் எஸ்.சுப்பிர மணி கருத்துரை வழங்கி னார். அறிவியல் இயக்கத் தின் முன்னாள் மாநிலப் பொருளாளர் கு.செந்தமிழ் செல்வன் புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, மாவட்டத் தலைவராக முத்துசிலுப்பன், செயலாள ராக செ.நா.ஜனார்த்தனன், பொருளாளராக என்.கோட்டீஸ்வரி உள்ளிட்ட 27 &nbsp;பேர் கொண்ட புதிய மாவட்டச் செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள்: வேலூர் மாவட்டக் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோருக்கு ஆலோ சனைகள் வழங்கவேண்டும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் யுனிசெப் நிறுவனத் துடன் இணைந்து அறிவியல் உபகரணங்கள் வழங்குவது.வானவில் மன்றம் மூலம் மாணவர் களுக்குக் கணிதம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிப் பயிற்சிகளை அளிப்பது.காட்பாடி - சேண்பாக்கம் மற்றும் காட்பாடி - சத்துவாச் சாரி இடையே புதிய நகரப் பேருந்துகளை இயக்க கோருவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தின் முடிவில் காட்பாடி கிளைத் தலைவர் ஆர்.சுதாகர் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.