தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

23 May 2026, 12:28 am
சென்னை விரைவு செய்திகள்

வேலூரில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு

வேலூர்,மே 22- வேலூர் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சியர், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தொகுதிகளையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், அரசின் நலத்திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடையவும் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்த பின், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளைத் தெரிவித்துத் தீர்வு காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் டி.அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் காஞ்சனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எம்.வினோத் கண்ணன், எம்.சுதாகர், த.வேலழகன், ஏ.தென்றல் குமார், க.சிந்து மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பொத்தேரி பகுதியில் அதிநவீன தபால் நிலையம்

செங்கல்பட்டு, மே 22- செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள, காட்டாங்கொளத்தூர் அஞ்சல் அலுவலகம் என்-ஜென் தபால் அலுவலகமாக மாற்றி அமைத்து, நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தபால் அலுவலகத்தில் இந்த வசதியை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.பொன்னுசாமி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர், மேஜர். மனோஜ் எம் ஆகியோர் இந்த வசதியைத் தொடங்கி வைத்தனர். இதில், நவீன சேவை முகப்பு, ஸ்பீட் போஸ்ட் மற்றும் பார்சல் சேவைகள், சேமிப்பு வங்கி சேவைகள், தபால் ஆயுள் காப்பீடு, ஆதார் சேவைகள் மற்றும் டிஜிட்டல் கட்டண வசதிகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்கப்பட உள்ளது. மேலும், வாடிக்கையாளர் அனுபவத்தை மெருகேற்றும் வகையில், தானியங்கி காபி வழங்கும் இயந்திரம், இலவச வைபை, நூலகம், போர்டு கேம்கள், சார்ஜிங் போர்ட்கள் போன்ற பிரத்யேகமான வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மாணவர்கள் மற்றும் இளம் பயனாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய, வசீகரமான மற்றும் நவீன டிஜிட்டல் வசதிகளுடன் பொது சேவை மையமாக காட்டாங்கொளத்தூர் தபால் அலுவலகம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், அஞ்சல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

பெயர் மாற்றம் நான் ஹர்ஷா சக்தி, நந்தகோபால் அவர்களின் மகள்,37/1, ஆலந்தூர் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை–15 இல் வசித்து வருகிறேன். எனது பழைய குடும்பப்பெயர் நந்தகோபால், புதிய குடும்பப்பெயர் நந்தகோபால் வினோதா ஆகும். இனி அனைத்து பயன்பாடுகளிலும் நான் ஹர்ஷா சக்தி நந்தகோபால் வினோதா என அறியப்படுவேன்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.