தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

30 Jun 2026, 12:15 am
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
<p><strong>மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்</strong> </p><p>வேலூர், ஜூன் 29 – வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள சென்றாயன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி புருஷோத்தமன் (35), அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வாரம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்ற புருஷோத்தமன் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மின்வாரியத்தின் அலட்சியமே விபத்திற்குக் காரணம் எனக் கூறி, புருஷோத்தமனின் உடலை அணைக்கட்டு – ஒடுக்கத்தூர் சாலையில் வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திங்களன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணம் பெற்றுத்தர உதவுவதாகவும் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். காவல்துறையினர் புருஷோத்தமனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.