முந்தய பக்கம்

வேலூர் நீதிமன்றத்துக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்

30 Jun 2026, 1:20 am
வேலூர் நீதிமன்றத்துக்கு  தொடர் வெடிகுண்டு மிரட்டல்
<p><strong>வேலூர் நீதிமன்றத்துக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் </strong></p><p>வேலூர், ஜூலை 29 - வேலூர், சத்துவாச்சாரி யில் ஒருங்கிணைந்த நீதி மன்றங்கள் இயங்கி வருகிறது. திங்கள் ஜூன் 29 வட்ட நீதிபதிக்கு மெயில் ஒன்று வந்தது. அதில் நீதிமன்றத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்குள் வெடிகுண்டு வெடித்து சிதறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.நீதிமன்ற ஊழியர்கள் இது குறித்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடி குண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வேலூர் நீதிமன்றத்திற்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram