தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டி போதிய பேருந்து வசதியின்றி 3 கிமீ தூரம் நடந்து சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்!

13 hours before
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டி போதிய பேருந்து வசதியின்றி  3 கிமீ தூரம் நடந்து சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டி போதிய பேருந்து வசதியின்றி 3 கிமீ தூரம் நடந்து சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்!

வேலூர், செப்.10-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. அமைச்சர் விஜயபாலாஜி துவக்கி வைத்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்காக புதன்கிழமை வருகை தந்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து காட்பாடி விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பகுதிக்கு போதிய பேருந்து வசதிகள் செய்துதரப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்தும், கிராமப் புறங்களில் இருந்தும் வந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஒருசிலர் தங்களது பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கொடுத்து ஆட்டோவில் ஏறி வந்த மாணவர்களையும் கூட, ஓட்டுநர்கள் முழுமையாக விளையாட்டு அரங்கம் வரை விடாமல் விஐடி கல்லூரிக்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

சுட்டெரித்த வெயில்

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து விளையாட்டு அரங்கம் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் உள்ள நிலையில், கையில் போதிய பணமின்றி தவித்த ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் செய்வதறியாது சுட்டெரிக்கும் வெயிலில் 3 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடந்து மைதானத்தை அடைந்தனர்.

ஆபத்தான பயணம்மற்றொரு கொடுமையாக விஐடியிலிருந்து விளையாட்டு மைதானம் செல்லும் வழியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. காட்பாடி ரயில் நிலையம் மார்க்கமாகத் தொடர்ந்து ரயில்கள் வந்த வண்ணம் இருப்பதால் இந்த லெவல் கிராசிங் கேட் சிறிது நேரம் மட்டுமே திறந்திருக்கும். விழாவிற்குச் செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் தாமதமானதால் விளையாட்டு மைதானத்திற்குச் செல்ல ஆபத்தை உணராமல் ரயில் வரும்போதே அவசர அவசரமாகக் கடந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒருசில பொதுமக்களும் உயிரைப் பணயம் வைத்து இருசக்கர வாகனங்களைத் தள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் சில நேரங்களில் விபத்து மற்றும் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதனைக் கண்ட பொதுமக்கள், மாவட்ட நிர்வாகமும் விளையாட்டு ஆணையமும் போட்டிக்குத் தகுந்த முன்ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்றும், விபத்து நிகழாமல் இருக்க ரயில்வே கிராசிங்கில் உடனடியாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதையை அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். - ஞானவேல்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.