தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக 4, அதிமுக 1 தொகுதிகளில் வெற்றி

6 May 2026, 1:36 am
வேலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக 4, அதிமுக 1 தொகுதிகளில் வெற்றி

வேலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக 4, அதிமுக 1 தொகுதிகளில் வெற்றி

வேலூர், மே 5- வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி களில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் என நான்கு சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகமும், அணைக்கட்டு தொகுதியை அதிமுகவும் வென்றது.

வேலூர் மாவட்டத்தில் ஐந்து தொகுதி களில் திமுக அதிமுக தேமுதிக நாதக தவாக மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 65 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவுடன் வாக்குபதிவு இயந்திரங்கள் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு (மே 5) திங்களன்று எண்ணப்பட்டது.

அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அலுவலர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலை யில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் திறந்து வாக்கு கள் எண்ணப்பட்டது.

இதில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன் ஆரம்ப சுற்றுகளில் முன்னிலை வகித்தாலும் கடைசி சுற்றுகளில் பின்தங்கி தவெக வேட்பாளர் வினோத் கண்ணனிடம் 6777 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

காட்பாடியில் ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலை வகித்தார்.

12 சுற்றுகளுக்கு பிறகு தவெக வேட்பாளர் மருத்துவர் சுதாகர் முன்னிலை பெற்று வாக்குகள் 5870 வித்தியாசத்தில் திமுக பொதுச்செயலாளர்துரைமுருகனை தோற்கடித்தார்.

அணைக்கட்டு தொகுதியில் ஆரம்ப முதலே திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் முன்னிலை வகித்து வந்த நிலையில் 5 சுற்றுகளுக்கு மேல் அதிமுக வேட்பாளர் வேலழகன் முன்னிலை பெற்றார்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சுமார் 7081 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கே வி குப்பம் தொகுதியில் தவெக வேட்பாளர் தென்றல் குமார் அதிமுக வேட்பாளர் (புரட்சி பாரதம் கட்சி)ஜெகன் மூர்த்தியை விட 20255 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

குடியாத்தம் தொகுதியில் ஆரம்ப சுற்றுகளில் முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர் பரிதா பின்னர் சரிவடைந்து திமுக வேட்பாளர் தேமுதிக வேட்பாளர் பிரதாப் முன்னிலை பெற்று வந்தார்.

பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக வேட்பாளர் சிந்து முன்னிலை பெற்று சுமார் 10,097 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் பிரதாப்பை வென்றார்.

வேலூர் மாவட்டமொத்த வாக்காளர்கள் - 1133587, மொத்தம் பதிவான வாக்குகள் – 1019845, வேலூர்தொகுதியில்மொத்த வாக்குகள் - 211063, பதிவான வாக்குகள் -188759 வினோத்கண்ணன் (தவெக) - 73032 ப.கார்த்திகேயன் (திமுக) - 66255 எஸ்ஆர்கே அப்பு (அதிமுக) - 44997 சோனியா (நாதக) - 3741 நோட்டா - 743 வாக்கு வித்தியாசம் - 6777 காட்பாடி மொத்த வாக்குகள் - 225809 பதிவான வாக்குகள் - 201487 சுதாகர் (தவெக) - 69868 துரைமுருகன் (திமுக) - 62225 ராமு (அதிமுக) - 63998 திருக்குமரன் (நாதக) - 4623 நோட்டா - 745 வாக்கு வித்தியாசம் - 5870 அணைக்கட்டு மொத்த வாக்குகள் - 234738 பதிவான வாக்குகள் - 214054 த.வேலழகன் (அதிமுக) - 76303 நந்தகுமார் (திமுக) - 69221 வேல்முருகன் (தவெக) - 63287 ரவிக்குமார் (நாதக) - 4746 நோட்டா - 1089 வாக்கு வித்தியாசம் – 7081, கே.வி.குப்பம் மொத்த வாக்குகள் - 213451 பதிவான வாக்குகள் - 187853 தென்றல்குமார் (தவெக) - 74305 ராஜேஸ்வரி (திமுக) - 53898 ஜெகன் மூர்த்தி (அதிமுக) - 54050 கலையேந்திரி (நாதக) - 5183 நோட்டா - 972 வாக்கு வித்தியாசம் - 20255 குடியாத்தம் மொத்த வாக்குகள் - 248526 பதிவான வாக்குகள் - 227692 சிந்து (தவெக) - 82858 பிரதாப் (தேமுதிக) - 72761 பரிதா (அதிமுக) - 64122 இமலன் (நாதக) - 5802 நோட்டா - 709 வாக்கு வித்தியாசம் - 10097

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.