பாட்டி வீட்டில் 6 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு
16 Jun 2026, 12:16 am
<p><strong>பாட்டி வீட்டில் 6 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு</strong> </p><p>வேலூர், ஜூன் 15- வேலூர் மாவட்டம், பேர ணாம்பட்டு அருகே பாட்டி வீட்டில் தங்கியிருந்த முகிலன் (6) என்ற சிறுவன் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் வசிக்கும் ராஜேஷ் - ஆஷா தம்பதியரின் மகனான முகிலன், மேல்பட்டி பகுதியில் உள்ள அவனது தந்தை வழிப்பாட்டி விஜயா வீட்டில் கடந்த 40 நாட்களாகப் பராமரிப்பில் இருந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்ததை அடுத்து அவனது சடலத்தை வீட்டிற்குள் வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்களும் ஊர் மக்களும் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மேல்பட்டி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் பாட்டி விஜயா மற்றும் அத்தை ரேவதி ஆகியோர் தொடர்ந்து மாந்திரீகச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அமாவாசை தினமான ஞாயிறன்று (ஜூன் 14) சிறுவனை அவர்கள் நரபலி கொடுத்திருக்கலாம் என உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காம்பவுண்ட் சுவற்றில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட காயத்தால்தான் சிறுவன் இறந்தான் என அவனது அத்தை தரப்பில் கூறப்படும் நிலையில், சந்தேகத்தின் பேரில் பாட்டி விஜயா மற்றும் அத்தை ரேவதியிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுவன் தவறி விழுந்து இறந்தானா அல்லது நரபலி கொடுத்து கொலை செய்யப்பட்டானா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>
