வேலூரில் 57 காசநோய் இல்லாத கிராமங்களுக்கு சான்றிதழ்
10 Oct 2026, 2:23 am
<p><strong>வேலூரில் 57 காசநோய் இல்லாத கிராமங்களுக்கு சான்றிதழ்</strong></p><p>வேலூர், அக்.9-வேலூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான காசநோய் இல்லாத கிராமங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 57 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் சான்றிதழ்களை வழங்கினார். இறையங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி குமரவேல், செயலர் அம்ஜத்குமார் ஆகியோர் சான்றிதற்றைப் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து ஆட்சியர் தலைமையில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் மாவட்ட சுகாதார அலுவலர் எம். விஜய்சந்திரன், இணை இயக்குநர் பி. சிவக்குமார், துணை இயக்குநர் கே.ஜெயஸ்ரீ மற்றும் ஊராட்சித் தலைவர்கள், செயலர்கள், தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.</p>
