தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெள்ளிமலை பஸ் டெப்போவில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரிக்கை

5 Jun 2026, 3:15 am
வெள்ளிமலை பஸ் டெப்போவில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரிக்கை

வெள்ளிமலை பஸ் டெப்போவில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரிக்கை

வெள்ளிமலை பஸ் டெப்போவில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரிக்கை கள்ளக்குறிச்சி, ஜூன் 4 - மகளிர் விடியல் பயணத் திட்டம் கல்வராயன்மலை பகுதி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளிமலையில் புதிதாக அரசு பேருந்து பணிமனை திறக்கப்பட்டது.

இந்த டெப்போவில் இருந்து கல்வராயன்மலையில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் வகையில் 10 சிற்றுந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக 27 டிரைவர்கள், 27 கண்டெக்டர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், டெப்போ தொடங்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாததால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

வழக்கமாகப் பணியாளர்களின் நலனுக்காக அமைக்கப்படும் மலிவு விலை உணவகம் இங்கு அமைக்கப்படவில்லை.

இதனால் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் ஊழியர்கள் வெளியிலுள்ள கடைகளில் சாப்பிட வேண்டிய நிலை நீடிக்கிறது.

மேலும், மலைப்பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாதந்திர மலைப் பயணப்படி ரூ.4 ஆயிரம், கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. வெள்ளிமலை ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த டெப்போ இடத்தை இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றாததால், இதற்கான மின்சாரக் கட்டணத்தை ஊராட்சி நிர்வாகமே செலுத்தி வருகிறது.

ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கான அரசிடமிருந்து வரும் நிதியே போதுமானதாக இல்லாத நிலையில், ரூ.20 ஆயி ரத்திற்கும் அதிகமாக வந்துள்ள இந்த மின் கட்டணத்தைச் செலுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் மறுக்கின்றனர்.

அதேபோல், டெப்போவில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால், மின்தடை ஏற்படும் போதும், மழைக்காலங்களிலும் ஊழியர்கள் இருட்டில் தவிக்கின்றனர்.

மேலும், வாகனங்களைப் பழுது பார்க்கும் பணிகள் இங்குத் தொடங்கப்படாததால், பஸ்களில் பழுது ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய கள்ளக்குறிச்சி டெப்போவிற்கே ஓட்டிச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையும், அரசுக்குக் கூடுதல் எரிபொருள் செலவும் ஏற்படுகிறது.

எனவே, வெள்ளிமலை டெப்போ விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாகச் செய்து தர வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.