வெள்ளியங்கிரி செல்ல இனி ஆன்லைன் பதிவு மட்டுமே!
14 May 2026, 9:06 pm

வெள்ளியங்கிரி செல்ல இனி ஆன்லைன் பதிவு மட்டுமே!

கோவை, மே 14- கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லத் திட்டமிடும் நபர்கள், இனி ஆன்லைன் முன்ப திவு முறை மூலமாக மட்டுமே அனு மதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மலை யேறும் நபர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறை இந்தத் திட்ட வரைவை உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், “மலையேறுபவர்கள் மருத்துவ ரீதியாகத் தகுதியுள்ளவர்களா என்பதை உறுதி செய்ய, முன்பதிவின் போது மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

குறிப்பிட்ட தேதியில் முன்பதிவு செய்யும்போது, தனிப் பட்ட விவரங்களுடன் மருத்துவச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை யையும் பதிவேற்ற வேண்டும்.

இந்த பருவத்தில் மட்டும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களால் 8 உயிரிழப்பு கள் ஏற்பட்டுள்ளன.

கரடுமுரடான மற்றும் செங்குத்தான 6,000 அடி உயரப் பாதையில் ஏறுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருப்பதி திருமலை கோவிலைப் பின்பற்றி, குறிப்பிட்ட நேர ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இதைச் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.