வெள்ளலூரில் அகழாய்வு: 2,200 ஆண்டுகள் பழமையான ரோமானிய வணிக தொடர்புக்கான சான்றுகள் கண்டெடுப்பு
19 Jul 2026, 10:40 pm
<p><strong>வெள்ளலூரில் அகழாய்வு: 2,200 ஆண்டுகள் பழமையான ரோமானிய வணிக தொடர்புக்கான சான்றுகள் கண்டெடுப்பு</strong></p><p>கோவை, ஜூலை 19- வெள்ளலூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், 2,200 ஆண்டு களுக்கு முந்தைய ரோமானிய வணிக தொடர்புகளுக்கான சான்றுகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. பண்டைய தென்னிந்தியாவில் ரோமானியர்களின் மிக முக்கிய வணிக மையமாக கோவை மாவட்டத்திலுள்ள வெள்ளலூர் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் இது வரை கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்களில் சுமார் 80 சதவீதம் வெள்ளலூரில் தான் கிடைத்துள்ளன என்பது இதன் வரலாற்று சிறப்பைக் காட்டுகிறது. கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன்பே இப்பகுதிக்கும் ரோமானி யர்களுக்கும் இடையே வணிக தொடர்பு இருந்துள்ளதாக கொங்கு கலைக் களஞ்சிய அதிகாரி ஜெக தீசன் தெரிவித்துள்ளார். இந்த வர லாற்றுச் சிறப்பின் அடிப்படையில், வெள்ளலூரிலுள்ள தேனீஸ்வரர் கோவில் அருகேயுள்ள நிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொல்லி யல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வரு கின்றன. இந்த அகழாய்வு குறித்து இயக்குநர் சுரேஷ் கூறுகையில், இங்கு நடைபெறும் அகழாய்வில் சங்கு மற்றும் கண்ணாடியால் ஆன வளையல்கள், சுடுமண் காத ணிகள், பாசி மணிகள், வளையல் கள் மற்றும் நெசவுத் தொழிலுக்கு பயன்படும் தறிக் கதிர் ஆகியவை அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையிலான தொடக்க கால வர லாற்றுப் பகுதியை சேர்ந்தவை. இதுதவிர, இடைக்காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தொல்பொருட்களும் இந்த அக ழாய்வில் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வுப் பணிகள் வருகிற அக் டோபர் மாதம் வரை நடைபெறும். அதன்பிறகு இங்கிருந்து சேகரிக் கப்படும் மாதிரிகள் அமெரிக்கா விலுள்ள ஆய்வகத்திற்கு அனுப் பப்பட்டு, அவற்றின் துல்லியமான காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படும், என்றார். அகழாய்வுப் பணிகளுக்கு உதவி வரும் வெள்ளலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பால தண்டபாணி கூறுகையில், பண் டைய காலத்தில் கேரளாவின் கள்ளிக்கோட்டையில் தொடங்கி பாலக்காடு, பேரூர், வெள்ளலூர், சிங்காநல்லூர், சூலூர், கரூர் வழி யாக பூம்புகார் வரை ‘ராஜகேசரி பெருவழி’ என்ற பழங்கால நெடுஞ் சாலை அமைந்திருந்தது. இந்த சாலையில் தான் வெள்ளலூர் அமைந்துள்ளது. இதனால், சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள் இங்கு தங்கி வணி கம் செய்துள்ளனர். தற்போது பண்டைய காலத்தில் நகரமாக இருந்திருக்கக் கூடிய ‘நத்தம் மேடு’, ‘உப்பிலியர் திட்டு’ ஆகிய குன்றுப் பகுதிகளில் தொல்லியல் துறை அகழாய்வு செய்து வரு கிறது. இதில் ரோமானிய மற்றும் ஆங்கிலேயர் கால நாணயங்கள், நடனமாடும் பொம்மை போன் றவை கிடைத்துள்ளன. இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றால், இன்னும் பல அரிய வரலாற்றுப் பொக்கிஷங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.</p>
