மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற பிறகு தண்ணீர் பிரச்சினையை பெருமளவு தீர்த்துள்ளோம்! வெள்ளகோவில் நகர்மன்ற உறுப்பினர் ராதாமணி
35 minutes before

மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற பிறகு தண்ணீர் பிரச்சினையை பெருமளவு தீர்த்துள்ளோம்!

வெள்ளகோவில் நகர்மன்ற உறுப்பினர் ராதாமணி

வெள்ளகோவில், நவ. 15-வெள்ளகோவில் நகராட்சி 7-வது வார்டில் தொடர்ச்சியாக நான்குமுறை தோல்வியடைந்தாலும், ஐந்தாவது முறை போட்டியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வார்டின்நகர்மன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வரும் ராதாமணி கூறியதாவது:“மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற பிறகு, எங்கள் வார்டில் நிலவிய உப்புத் தண்ணீர் பிரச்சினையை பெருமளவு தீர்த்துள்ளோம். ஸ்ரீராம் நகர் பகுதியில் ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறுகள், சின்டெக்ஸ் தொட்டி மற்றும்மோட்டார் அமைத்து 15 குழாய்களும், 6 தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நடேசன் நகர் பகுதியில் ஆழ்துளைக் கிணறு, 4 சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் மோட்டார் அமைத்து 73 உப்புத் தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நடேசன் நகர் தெற்குப் பகுதியில் ரூ. 4.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறும், 4-வது வீதியில் ரூ. 2.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறுடன் சின்டெக்ஸ் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன. 3-வது வீதியில் சாலையின் நடுவில் இடையூறாக இருந்த அடிகுழாய் அகற்றப்பட்டு, ரூ. 3.5 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறு மற்றும் மோட்டார் அறை அமைக்கப்பட்டுள்ளது. 2-வது வீதியில் தண்ணீர் தொட்டி,மோட்டார் அமைத்து மூன்று வீதிகளுக்கு 9 குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் 5 தார்சாலைகள், 45 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதோடு, பள்ளிக்குழந்தைளின் பாதுகாப்பு கருதி பொதுக்கிணற்றுக்கு கம்பி வலையும் அமைத்துக் கொடுத்துள்ளோம். மேலும்,பொதுமக்களுக்கு 60 ரேஷன் கார்டுகள், 45 ஆதார் கார்டுகள், 27 முதியோர் ஓய்வூதியம், 17 மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 7 வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் 58 வீடுகளுக்குக் கழிப்பிடம் கட்ட தலா ரூ. 8,000 மானியம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

மற்ற நகராட்சிகளை போல வெள்ளகோவிலிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டபோது மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. அம்ருத் திட்டத்தில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் நகரமே பழுதடைந்துள்ளது. எங்கள் வார்டில் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு 5 சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன; இன்னும் 20 சாலைகள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளது.

மிக முக்கியமாக, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முன்பு 5 நாட்களுக்கு ஒருமுறை கிடைத்தகுடிநீர், தற்போது 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் கிடைக்கிறது. கொடுமுடியில் மோட்டார் பழுது, மழை போன்ற காரணங்களை கூறாமல், 21 வார்டுகளிலும் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கி 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளைக் கொண்டு செல்லும்போது நகராட்சி நிர்வாகம் ஓரளவு ஒத்துழைப்பு அளித்தாலும், கடந்தஆறு மாத காலத்தில் பெரிய அளவில் எந்த பணிகளும் நடைபெறவில்லை” என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழுஉறுப்பினர் கருப்பசாமியும், நகர்மன்ற உறுப்பினர் ராதாமணியின் கணவர், மார்க்சிஸ்ட் கட்சியைசேர்ந்த முருகனும் ராதாமணியின் பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்திவருகின்றனர்.