தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவக்கட்டமைப்பு இருந்தும் முழு பயன்பாடு இல்லை! வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் வாலிபர் சங்க கள ஆய்வில் அம்பலம்

59 minutes before
மருத்துவக்கட்டமைப்பு இருந்தும் முழு பயன்பாடு இல்லை! வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் வாலிபர் சங்க கள ஆய்வில் அம்பலம்

மருத்துவக்கட்டமைப்பு இருந்தும் முழு பயன்பாடு இல்லை! வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் வாலிபர் சங்க கள ஆய்வில் அம்பலம்

திருப்பூர், அக்.7-திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதனன்று நேரடி கள ஆய்வு செய்தனர். வாலிபர் சங்க 15 வேலம்பாளையம் கிளையின் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாலிபர் சங்கம் நடத்திய தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, இந்த அரசு மருத்துவமனை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. மருத்துவமனை திறக்கப்பட்டது முதல் பல்வேறு அடிப்படை தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி மருத்துவர், செவிலியர் போன்ற தேவைகள் குறித்து தொடர்ச்சியாக வாலிபர் சங்கம் தலையிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த கள ஆய்வு பணியில் பல்வேறு தகவல்கள் கோரிக்கைகள் பெறப்பட்டது.

வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் மொத்தம் எட்டு மருத்துவர்கள் இருக்க வேண்டிய சூழலில் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே முழுமையாக பணியில் உள்ளனர். காலை நேரங்களில் மட்டும் பயிற்சி மருத்துவர்கள் மூன்று பேர் வந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது போதுமான எண்ணிக்கை இல்லை. அதேபோல செவிலியர்கள் 20 பேர் நியமிக்கப்பட வேண்டிய சூழலில் ஐந்து அல்லது ஆறு செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். மருத்துவர் அல்லாத பணியாளர்களின் எண்ணிக்கையும் போதுமான அளவில் இல்லை, குறிப்பாக 86 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக இருப்பினும் 30 படுக்கைகளை மட்டுமே கவனிப்பதற்கு செவிலியர்கள் உள்ளனர். அதுவும் காலை நேரங்களில் இரண்டு செவிலியர், மாலை நேரங்களில் ஒரு செவிலியர் என்ற எண்ணிக்கையிலேயே பற்றாக்குறையாக உள்ளது.

ரத்த பரிசோதனை நிலையம் செயல்பட்டாலும், தைராய்டு போன்ற முக்கிய பரிசோதனை செய்யப்படுவதில்லை. அதே போல இசிஜி எக்ஸ்ரே இருந்த போதிலும் எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன் வசதி இல்லாமல் உள்ளது. டயாலிசிஸ் செய்வதற்கான உபகரணங்கள் இருந்த போதிலும் அதை உபயோகப்படுத்துவதற்கான மருத்துவப்பணியாளர் இல்லை. அதேபோல மகப்பேறு பிரிவில் சுகப்பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடு இல்லை. கட்டமைப்பு ரீதியாக பல்வேறு வசதிகள் இருந்த போதிலும் முழுமையாக செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் உள்ளது.

அதேபோல அருகாமையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவமனையும் நகர்ப்புற சுகாதார நிலையமும் அருகாமையில் இருப்பதை பொருட்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் பெருமளவிலான குப்பைகளைஅருகில் கொட்டி வருகிறது. இதுவும் மிக முக்கியபிரச்சனையாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த கள ஆய்வில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுபாஷ், பிரவீன், நகரக்குழு உறுப்பினர் மதியரசு, கிளைச் செயலாளர் புனிதன், கிளைத் தலைவர் கலைவாணன், கிளை உறுப்பினர்தமிழரசு, மார்க்சிஸ்ட் கட்சியின் மண்டலக்குழு உறுப்பினர் சின்னச்சாமி, கிளைச் செயலாளர் சரவணன், பனியன் தொழிற்சங்க நிர்வாகி சஜினா ஆகியோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.