தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ள வேலம்பாளையம் இடுகாடு

5 Mar 2026, 3:59 pm
சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ள வேலம்பாளையம் இடுகாடு
<p><strong>சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ள வேலம்பாளையம் இடுகாடு</strong></p> <p>திருப்பூர், மார்ச் 5- &nbsp; திருப்பூர் மாநகராட்சி, 12 ஆவது &nbsp;வார்டுக்குட்பட்ட வேலம்பாளை யம் பகுதியில் உள்ள அரசு இடுகாடு, &nbsp;முறையான பராமரிப்பு இல்லாத தால் சமூக விரோதிகளின் புகலிட மாக மாறியுள்ளது. மேலும், புதர் &nbsp;மண்டி, குப்பை மேடாக காட்சியளிக் கும் இந்த இடுகாடு, தற்போது &nbsp;போதைப் பொருள் பயன்படுத்து பவர்களின் தலமாகவும் உருமாறி இருப்பதாகவும் உடனடியாக நடவ டிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் &nbsp;நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ள னர். வேலம்பாளையம் அரசு மருத்து வமனைக்கு பின்புறம் அமைந்துள்ள இந்த இடுகாடு, இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தி வைக் கும் இடமாகும். ஆனால், தற்போது &nbsp;அந்த இடத்தின் நிலைமை முற்றி லும் மாறியுள்ளது. மாநகராட்சி நிர்வா கம் முறையாக பராமரிப்புப் பணி களை மேற்கொள்ளாததால், இடு காடு முழுவதும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. மேலும், இந்த இடுகாட்டை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகா தாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த &nbsp;இடுகாடு சமூக விரோதிகளின் புகலிட மாக மாறியுள்ளது. இரவு நேரங்க ளில் இங்கு கஞ்சா, மது &nbsp;போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் சுற்றி திரி வதாகவும், இதனால் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். &nbsp;குறிப்பாக, இதே பகுதியில் இயங்கி வரும் 12 ஆவது வார்டு நகர் &nbsp;நல மையத்திற்கு தினமும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் சிகிச்சைக் காக வந்து செல்கின்றனர். பெண்கள் &nbsp;மற்றும் குழந்தைகள் அதிகம் வரும் &nbsp;இந்த முக்கியமான இடத்தின் அருகி லேயே இந்த அசம்பாவிதம் நிகழ்வது மருத்துவப் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அச் சுறுத்தலாக உள்ளது. மேலும், இடு காட்டில் இறுதிச் சடங்குகள் செய்ய வரும் உறவினர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள காத்திருப்போர் அறை மற்றும் தகனம் செய்யும் இடம் ஆகியவை சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை யில் உள்ளன. இடுகாட்டின் உள்ளே செல்லும் சாலையும் பரா மரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. மழைக் காலங்களில் சேறும் சகதியு மாக மாறும் இந்தப் பாதையில் நடந்து &nbsp;செல்வது சிரமமாக உள்ளது என &nbsp;அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் கூறுகையில், &rdquo;வேலம்பாளையம் இடுகாடு இன்று &nbsp;ஒரு சமூக விரோதிகளின் புகலிட மாக மாறியுள்ளது மிகவும் வேதனைக்குரியது. இந்த இடு காட்டை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் சுற்றி வலு வான சுற்றுச்சுவர் அமைத்து, உள்ளே &nbsp;நுழையும் வாயிலில் கதவு பொருத்த &nbsp;வேண்டும். இதனால் சமூக விரோதி கள் எளிதில் உள்ளே நுழைய முடி யாது. மேலும், இடுகாட்டின் உள்ளே &nbsp;மரக்கன்றுகள் நட்டு, புல்வெளியு டன் கூடிய நடைபாதை அமைத்து, மின் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். தகனம் &nbsp;செய்யும் இடம் மற்றும் காத்திருப் போர் அறையைப் புதுப்பித் துக் கொடுக்க வேண்டும். இறந்த வர்களின் உறவினர்கள் அமைதியாக வும், மரியாதையாகவும் இறுதிச் சடங்குகளை செய்யும் வகையில் இந்த இடத்தை மேம்படுத்த வேண் டும். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம் பாளையம் நகரக்குழு சார்பில், &nbsp;மாநகராட்சி முதல் மண்டல அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது. அப் போது விரைவில் நடவடிக்கை எடுப்ப தாக அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக இடுகாட்டை தூய்மைப்படுத்தி, உள்கட்டமைப்புகளை மேம்ப டுத்தி, சமூக விரோதிகளின் நட மாட்டத்தைத் தடுக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி போராட்டம் &nbsp;நடத்துவோம் என தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.