தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 6 ஏக்கரில் புதிய பேருந்து முனையம்

15 May 2026, 1:03 am
வேளச்சேரி ரயில் நிலையம் அருகே  6 ஏக்கரில் புதிய பேருந்து முனையம்

வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 6 ஏக்கரில் புதிய பேருந்து முனையம்

சென்னை, மே 13 - சென்னை மாநகரில் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்தி மேம்படுத்தும் வகையில், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 6 ஏக்கரில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது.

வணிக வளாகத்துடன் கூடிய இந்த முனையத்தை அமைப்பதற்கான பணி களை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது.

சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தில், தினசரி 700க்கும் மேற்பட்ட வழித் தடங்களில், 3 ஆயிரத்து 454 பேருந்துகள் இயக்கப்படு கிறது.

சென்னை நகரின் எல்லைகள் விரிவடைந்து வருகிறது.

மக்கள் பெருக் கம், பயணிகளின் எண்ணி க்கை அதிகரிப்பிற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க வும், புதிய பணிமனைகளை அமைக்கவும் போக்கு வரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, வேளச் சேரியையொட்டி மடிப் பாக்கம், பெருங்குடி, பள்ளி க்கரணை, உள்ளிட்ட பகுதி கள் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளன.

இந்தப் பகுதி களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது.

மேலும், மெட்ரோ ரயில் திட்டமும் அமல் படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடரச்சியாக, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக் கப்பட உள்ளது.

இந்த இடத்தை, போக்குவரத்து கழக அதிகாரிகள் அண்மை யில் ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து, போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “சென்னை புற நகர் பகுதியில் குடியிருப் புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதி கரித்து வருகிறது.

அதன் காரணமாக பேருந்து தேவை அதிகரித்துள்ளது.

எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டி உள்ளது. அதற்கேற்ப பணிமனைகளையும், புதிய பேருந்து நிலையங்க ளையும் அமைக்க வேண்டி உள்ளது.

பரங்கிமலை -வேளச் சேரி - கடற்கரை மேம்பால ரயில் இணைப்புக்கு பின், ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

தினசரி பயணிப் பவர்களின் 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை தினசரி அதி கரிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது.

தாம்பரம் - வேளச்சேரி - கிண்டியை இணைக்கும் புதிய மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு ரயில் நிலையம் அருகே கழகத்துக்கு சொந்த மான 6 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகத்துடன் வடிய புதிய பேருந்து முனையம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் விரைவில் நடத்தப்படும்.

அதன்பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதை தமிழக அரசிடம் சமர்ப் பித்து ஒப்புதல் பெறப்படும்.

இந்த பேருந்து முனை யத்தில் டீசல் பேருந்துகள், மின்சார பேருந்துகள் நிறுத் துவதற்கான வசதி செய்யப் படும்.

வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு அம்சங் களும் இடம் பெறும்.

சென்னையில் தனியார் சிற்று ந்துகள் இயக்கத்தை விரிவு படுத்தும் திட்டத்தின் கீழ், வேளச்சேரியில் இருந்து கீழ்க்கட்டளை, மடிப் பாக்கம், மேடவாக்கத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் இணைக்கப்பட உள்ளன.

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், ஐ.டி., நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் சோழிங்கநல் லுாரையும் இணைக்கும் முக்கிய மையமாக வேளச் சேரி உள்ளதால், பேருந்து களின் இயக்கத்தை அதி கரிக்க பேருந்து நிலையம் உதவும்.

பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கு செல்லும் பேருந்து களையும் இந்த முனையத் திலிருந்து இயக்க நட வடிக்கை எடுக்கப்படும்.

பண்டிகை, விடுமுறை, விழாக்கள் போன்ற நிகழ்வு காலங்களில் ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசல் பயணத் திற்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர்.

எனவே, பண்டிகை

கால ங்களில் வெளி மாவட்டங் களுக்கு செல்லும் பேருந்து களை, வேளச்சேரி முனை யத்தில் இருந்து இயக்கவும் ஆலோசிக்கப்படும்.

இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்தால், வேளச் ச்சேரி புதிய பேருந்து நிலை யம் ஒருங்கிணைந்த முனை யமாக மாறும்.

இவை யெல்லாம் நிகழும்போது வேளச்சேரி பேருந்து முனை யம் முக்கியத்துவம் வாய்ந்த தாக மாறும்” என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.