வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஜெ.எம்.ஏ.அசன் மௌலானா உறுதி
10 Apr 2026, 5:30 am

வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஜெ.எம்.ஏ.அசன் மௌலானா உறுதி

சென்னை, ஏப்.9- வேளச்சேரியை வேளச்சேரியாக மாற்றுவோம். எனவே, மக்கள் ஆதரவு வெற்றியை தருவார்கள் என்று வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஜெ.எம்.ஏ.அசன் மௌலானா கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜெ.எம்.ஏ.அசன் மௌலானா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

இதனையொட்டி 175வது வட்டம் வேளச்சேரி பெரியார் நகரில் இருந்து வாக்கு சேகரிப்பை புதனன்று (ஏப்.8) தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். வேளச்சேரி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ள வளர்ச்சிப்பணிகளை கூறினார்.

வேட்பாளர் அசன் மௌலானா கூறுகையில், 'தமிழக அரசின் ஒத்துழைப்போடு வேளச்சேரியாக இருந்த இடங்களையெல்லாம் வேளச்சேரியாக மாற்றி அமைத்துள்ளோம். அடுத்து அமையும் திமுக அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு கொண்டு வர உள்ளது. பூமிக்கு மேல் கம்பங்கள் வழியாக செல்லும் மின் கம்பிகளை புதைவடமாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது' என்றார்.