வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது
14 Mar 2026, 2:57 pm
<p><strong>வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது</strong></p>
<p>சென்னை, மார்ச் 14- சென்னையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க் ்கப்பட்ட வேளச்சேரி – பரங்கி மலை இடையேயான பறக்கும் ரயில் சேவை சனிக்கிழமையன்று பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கியது. மார்ச் 14 அன்று அதி காலை 5 மணிக்கு முதல் ரயில் சேவை தொடங்கி யது. வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை நோக்கி காலை 5:25 மணிக்குப் புறப்பட்ட முதல் ரயில், 6:05 மணியளவில் பரங்கி மலை நிலையத்தைச் சென்றடைந்தது. சுமார் 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் புதிய பாதையில் புழுதி வாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இரண்டு ரயில் நிலை யங்கள் உள்ளன. இதில் ஆதம்பாக்கம் நிலை யத்தில் தற்போது பரா மரிப்புப் பணிகள் நடை பெற்று வருவதால், ரயில்கள் அங்கு நிற்காது. புழுதிவாக்கம் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக் கப்பட்டுள்ளது.</p>
