திருச்சி விரைவு செய்திகள்
4 Dec 2025, 3:52 pm

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.10 இல் ஏலம்

திருச்சிராப்பள்ளி, டிச.4- திருச்சி மாவட்ட சூப்பரண்ட் ஆப் போலீஸ் செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருச்சி மாவட்ட காவல் துறையினரால் சட்டவிரோத மது விற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 10 இருசக்கர வாகனங்கள், இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகிய 13 வாகனங்கள் சுப்ரமணியபுரம். மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர், டிச.10 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆதார் அட்டையுடன், முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, ஜிஎஸ்டி செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்’’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர், டிச. 4- பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் முகாம், டிச.11 ஆம் தேதி பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து பெரம்பலுார் தொழிலாளர் உதவி ஆணையர்(பொ) மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளருக்கு 18 நலவாரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவித்தொகை தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிலாளர் ஆணையர் உத்தரவுப்படி, வீட்டு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் முகாம் டிச.11 ஆம் தேதி பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நடைபெறுகிறது. வீட்டு பணியாளர்கள், தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், டிரைவிங் லைசென்ஸ் ஆகிய அசல் ஆவணங்களுடன் பாஸ் போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வந்து, உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.