நூறு சதவீதம் வாக்களிக்க கோரி கடற்கரை பகுதியில் வாகன விழிப்புணர்வு பேரணி
31 Mar 2026, 4:50 pm
<p><strong>நூறு சதவீதம் வாக்களிக்க கோரி கடற்கரை பகுதியில் வாகன விழிப்புணர்வு பேரணி</strong></p>
<p>அறந்தாங்கி, மார்ச் 31- தமிழக சட்டமன்றத் தேர்தலில், பொதுமக்கள் அனைவரும் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி, மணமேல்குடி தாலுகாவில் செவ்வாய்கிழமை இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோட்டைப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முதல், கட்டுமாவடி மீன் சந்தை வரை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறந்தாங்கி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமையிலும், மணமேல்குடி வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் முன்னிலையிலும் நடைபெற்ற இப்பேரணி, முடிவில் கடல் கன்னி செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டும், மீனவ பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், உறுதிமொழி எடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.</p>
<p> </p>
