வீரபாண்டி கோயில் மேற்கூரை பூச்சு விழுந்து பெண் காவலர் காயம்
12 May 2026, 10:37 pm
<p><strong>வீரபாண்டி கோயில் மேற்கூரை பூச்சு விழுந்து பெண் காவலர் காயம்</strong></p><p>தேனி, மே 12- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் மேற்கூரை பூச்சு விழுந்து சித்திரைத் திருவிழா பணியில் ஈடு பட்டிருந்த பெண் போலீசார் காய மடைந்தார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீர பாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாயன்று தொடங்கி வரும் மே 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 நாட்கள் இரவு பகலாக நடைபெறும் இத்திரு விழாவில், தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, அலகு குத்துதல் என நேர்த் திக்கடன் செலுத்தவும், இயந்திர ராட்டினங்கள், கண்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை காண்பதற்கு பொதுமக்கள், பக்தர் கள் என நாள்தோறும் லட்சக்கணக்கா னோர் வீரபாண்டி வந்து செல்வார்கள். இந்து அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள இக்கோயில் திருவிழா பணிக்காக தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 3 பேர் தலைமையில், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வா ளர்கள், காவலர்கள் மற்றும் ஊர்க் காவல் படையினர் என சுமார் 1,000 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சன்னதியின் தெற்கு வாசல் பகுதியில் செவ்வாயன்று பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர், ஆலயத்தின் மேற் கூரை பூச்சு விழுந்து காயமடைந்தார். நல்வாய்ப்பாக சுதாரித்துக் கொண்ட பெண் காவலர் மேற்கூரை பூச்சு விழுந்த சமயத்தில் அங்கிருந்து நக ர்ந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. இருப்பினும் மேற்கூரை பூச்சு விழுந்ததில் பெண் காவலர் முத்து லட்சுமிக்கு கை மற்றும் கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடி யாக மீட்கப்பட்ட அவர் அங்குள்ள மருத்துவ முகாமில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ பிரியா மற்றும் இந்து அறநிலையத்துறை உதவி ஆணை யர் ஜெயதேவி உள்ளிட்டோர் ஆய்வு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
